அன்புடையீர் வணக்கம்... நமது பேரவை விழாவிற்கு நாட்களே உள்ளது.
 
  • Days
  • Hours
  • Minutes
  • Seconds

FeTNA Malar

பேரவையின் தமிழ் விழா 2024 மலருக்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

வரும் சூலைத் திங்கள் டெக்சாஸ் சான் ஆண்டோனியோவில் நடைபெறவிருக்கும் நமது பேரவையின் 37-ஆவது தமிழ் விழாவையொட்டி சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இம்மலரில் வெளியிட கீழ்கண்ட பெரும் பிரிவுகள் / தலைப்புகளில் கட்டுரை, கதை, கவிதை போன்ற படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. மலர்க் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு தேர்வாகும் படைப்புகள் விழா மலரில் வெளியிடப்படும்.



1. பேரவையின் 37-ஆவது தமிழ் விழாவின் கருப்பொருள் : சமத்துவம், தமிழரின் தனித்துவம்

2. 2024-ஆம் ஆண்டு விழாவின் சிறப்பியல் : நூற்றாண்டு காணும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மற்றும் மாப்புலவர் மா. நன்னன்

3. கீழ்க்கண்ட தமிழ்ச் சான்றோர்கள் பற்றிய கட்டுரை:

திருப்பூர் குமரன் (120-ஆம் நினைவு ஆண்டு)

கல்வித் தந்தை காமராசர் (120-ஆவது பிறந்த நாள்)

பாவேந்தர் பாரதிதாசன் (133-ஆவது பிறந்த நாள்)

தவத்திரு குன்றக்குடி அடிகளார் (99-ஆம் பிறந்த நாள்)

இந்தியாவின் எடிசன் கோபால்சாமி துரைசாமி (130-ஆவது பிறந்த நாள்)

தில்லையாடி வள்ளியம்மை (126-ஆவது பிறந்த நாள்)


4. மற்றும்

சூலை 2023 முதல் நடந்த தமிழ், மற்றும் தமிழர்கள் சார்ந்த முக்கிய நிகழ்வுகள்

ஆராய்ச்சி/ஆய்வுக் கட்டுரைகள்

ஈழப் படைப்புகள்

தமிழிசை மற்றும் தமிழ் திரைத்துறை சார்ந்த கட்டுரைகள்


படைப்புகளுக்கான மலர்க் குழுவின் பரிந்துரைகள்:

1-மொழி சமத்துவம் - தமிழில் மொழிமாற்றம் பெற்ற இலக்கியங்கள்.

2-இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் சமத்துவ நிலை

3-சமத்துவக் கொள்கைகள் - மறு ஆய்வின் அவசியம்

4-யாதும் ஊரே யாவரும் கேளிர்

5-கல்வியில் சமத்துவம்

6-தமிழ்ச் சமூகத்தில் பாலின சமத்துவம் (சங்ககாலம் முதல் நிகழ்காலம் வரை)

7-குறள் கூறும் சமத்துவம்

8-சமத்துவம் வளர்த்த சான்றோர்கள்

9-சமத்துவபுரம் - உழவர் சந்தைகளில் சமத்துவம்

10-பாலின பொருளாதாரச் சமத்துவம்

11-சமத்துவக் கொள்கைகள் தனித்துவத்தைப் பாதிக்கிறதா?

12-சாதி மத இன சமத்துவம் - அமெரிக்காவின் நிலைப்பாடும், தமிழரின் நிலைப்பாடும்

13-பெட்டிச் செய்திகள்: நகைச்சுவைத் துணுக்குகள் - (வீட்டு வேலையில் சமத்துவம், கலப்புத் திருமண கலாட்டாக்கள், அன்றாட வாழ்க்கையில் சமத்துவம் எப்படி உள்ளது?)


படைப்புகளுக்கான விதிமுறைகள்:

1-அனைத்து படைப்புகளும் Fetna 2024 இதழுக்காக படைக்கப்பட்டதாகவும், வேறு எங்கும் வெளியிடப் படாததாகவும் இருத்தல் வேண்டும். படைப்புகள் முடிந்த அளவு பிற மொழிச் சொற்கள் கலக்காமல், தமிழில் இருத்தல் வேண்டும்.

2-படைப்புகளில் அரசியல், மதம், தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல் அவசியம்.

3-படைப்புகள் ஒருங்குறி எழுத்துருவிலும் (Unicode), எழுத்துரு அளவு (font size) 12- லும் இருத்தல் வேண்டும்.

4-படைப்புகள் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

5-படைப்புகள் MS-Word Format - இல் இருத்தல் அவசியம். PDF Format ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

6-படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: malar2024@fetna.org

7-படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: மார்ச் -20, 2024


படைப்புகளுடன் கீழ்க்கண்ட விவரங்களை அனுப்பி வைக்கவும்:

தமிழில் தங்களின் முழுப் பெயர்

மின்னஞ்சல் முகவரி

தொலைபேசி எண்

நாட்டின் பெயர்

தங்களின் பாஸ்போர்ட் அளவிலான வெற்று பின்னணியுடன் கூடிய வண்ணப் புகைப்படம்